தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு
தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத படுக்கைகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் 25 சதவீத படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Next Story

