தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு : இந்தோனேஷியாவில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது.
x
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அறிகுறியுடன் இருந்த வெளிநாட்டு பயணிகள் மற்றும் பொதுமக்கள் 890 பேரிடம் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. இதில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தோனேஷியாவில் இருந்து தமிழகம் வந்த 4 பேர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சேலம் மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்