இந்தோனேசிய மதபோகதர்கள் 4 பேர் உள்பட 5 பேருக்கு கொரோனா - உடனடியாக தகவல் தெரிவிக்க சேலம் ஆட்சியர் உத்தரவு

இந்தோனேஷியாவில் இருந்து மதபோதகர்கள் 4 பேர் மற்றும் அவர்களது வழிகாட்டி ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து தகவல் அளிக்க சேலம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தோனேசிய மதபோகதர்கள் 4 பேர் உள்பட 5 பேருக்கு கொரோனா - உடனடியாக தகவல் தெரிவிக்க சேலம் ஆட்சியர் உத்தரவு
x
இந்தோனேசியாவில் இருந்து மார்ச்11 ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு வந்து,
சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிக்கு சென்று மதபோதனைகளில் 11 பேர் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த நபர், மற்றும் சேலத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 16 பேரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டடது. அவர்களை தனிமைப்படுத்தி 4 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைத்த நிலையில், 4 போதகர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள இந்த 5 நபர்கள் பங்கேற்ற  நிகழ்ச்சிகளில் வருகை தந்திருந்த அனைத்து நபர்களும் தாமாக முன்வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 - ல் தொடர்பு கொண்டு தங்களின் விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்