வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கண்காணிப்பு

நாகை மாவட்டத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த, 343 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கண்காணிப்பு
x
நாகை மாவட்டத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த, 343 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்த பட்டவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் மாவட்ட  நிர்வாகம் சார்பில் அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் நாடு திரும்பிய, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, 479 பேர் வீடுகளில் அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள்,  சுகாதார அலுவவர்கள் மற்றும் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 843 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். பரமக்குடியில் வெளிநாட்டிலிருந்து வந்த13 பேரை அதிகாரிகள் தனிமைப்படுத்தி  கண்காணித்து வருகின்றனர். வருவாய்த்துறையினர், நகராட்சி ஊழியர்கள், மற்றும் காவல்துறையினர்  அவர்களை வீடுகளை விட்டு  வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அந்த வீடுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்