ஈரானில் சிக்கி உள்ள மீனவர்களை மீட்க குடும்பத்தார் கண்ணீர் மல்க கோரிக்கை

ஈரானில் சிக்கி உள்ள நாகை, கடலூர் மாவட்ட மீனவர்களை கொரோனா தாக்குவதற்கு முன்பு, பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனரவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஈரானில் தவித்து வரும் நிலையில், முதற்கட்டமாக 50 பேர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மீதமுள்ள மீனவர்களை மீட்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மனு அளிக்க நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மீனவர்களின் பெற்றோர்கள் மீனவர்களை மீட்க கோரி கண்ணீர் மல்க கதறி அழுதனர். 


Next Story

மேலும் செய்திகள்