கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக, தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும், ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 11 எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கெரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 60 கோடி ரூபாய் நிதி உடனடியாக ஒதுக்கவும், முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஆன்மிக ஸ்தலங்களில் தூய்மைப் பணியை தீவிரப்படுத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தால், அவர்கள் வருவதை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுநோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நாள் தோறும் சுகாதாரத் துறை அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது

பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிகளவில் கூடுவதையும், அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். கூட்டம் நிறைந்த இடங்களுக்கு வயதானவர்கள், நோய் வாய்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுமாறும், பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Next Story

மேலும் செய்திகள்