சமூக வலைதளம் மூலம் தொடர் பாலியல் தொல்லை - 5 பெண்கள் அளித்த புகாரில் கைதான கடலூர் இளைஞர்

சமூக வலைதளம் மூலம் பெண்களுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், குண்டர் சட்டத்திற்கு ஈடான சைபர் சட்டத்தில் முதல் முறையாக சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக வலைதளம் மூலம் தொடர் பாலியல் தொல்லை - 5 பெண்கள் அளித்த புகாரில் கைதான கடலூர் இளைஞர்
x
கடலூரைச் சேர்ந்த விக்னேஷ்  மீது சென்னையைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் மத்திய குற்றப் பிரிவில் தொடர் புகார் அளித்து இருந்தனர். போலி சமூக வலைதள கணக்கை உருவாக்கி பழகியதாகவும், பின்னர் வாட்ஸ் அப்பில் பெற்ற புகைப்படங்களை பெற்று  ஆபாசமாக சித்தரித்து, தங்களை மிரட்டியதாகவும் புகார் அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து, பிப்ரவரி 15 ஆம் தேதி கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது, சைபர் சட்டப்படி   முதல்முறையாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சைபர் குண்டர்கள் என பட்டியலிடப்படுபவர்கள் பட்டியலில்  முதல் ஆளாக விக்னேஷ் இடம்பெற்றுள்ளார். குண்டர் சட்டத்தை ரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகுவது போல இந்த சட்டத்தையும் ரத்து செய்ய குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்