கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் - தாழிகள், பானைகள், கூம்பு வடிவ மூடி கண்டெடுப்பு

கீழடி கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழியை பாதுகாக்க தொல்லியல்துறை கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் - தாழிகள், பானைகள், கூம்பு வடிவ மூடி கண்டெடுப்பு
x
கொந்தகையில் நடைபெற்று வரும் ஆறாம் கட்ட அகழாய்வில் கலைநயமிக்க தாழிகள், சின்னச்சிறு மண்பானைகள், கூம்பு வடிவிலான முடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தாழியின் முகப்பு பகுதியில் பிடிமானத்திற்காக தடிமனாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தாழிகளின் வடிவம், உயரம் உள்ளிட்டவைகளும் தனித்தனியாக மதிப்பிடப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியத்துறை தெரிவித்துள்ளது. மண்ணில் புதைந்துள்ள அவைகளை சிதையாமல் வெளியே எடுக்க, கொந்தகையில் கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்