"ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு" - பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
தமிழகம் முழுவதும் ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம் உயர்த்தப்படும் என பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தில் தி.மு.க உறுப்பினர் கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் புதிய சம்பளம் நிர்ணயக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த குழுவின் பரிந்துரைப்படி, ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மீண்டும் பேசிய உறுப்பினர் கருணாநிதி, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்றார். தற்போது சோதனை முறையில், தூத்துக்குடி, நெல்லையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
Next Story