தொடர் சரிவில் கச்சா எண்ணெய் விலை - விலை குறைந்து வரும் பெட்ரோல் - டீசல்

கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது.
தொடர் சரிவில் கச்சா எண்ணெய் விலை - விலை குறைந்து வரும் பெட்ரோல் - டீசல்
x
கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் வரை விலை  குறைந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, பேரல் 35 டாலராக சரிந்துள்ளது. பிப்ரவரி மாத  இறுதியில் இருந்தே கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், சந்தையை கைப்பற்றும் நோக்கில் சவுதி அரேபியா அதிரடியாக 30 சதவீதம் வரை விலை குறைத்தது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வர்த்தகமாகிறது. இந்த நிலையில்,  சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்