குடியுரிமை சட்ட திருத்தம் - மக்கள் மனநிலை என்ன?

சிஏஏ தொடர்பாக தமிழகம் முழுவதும் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
x
நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பி யிருக்கிறது, குடியுரிமை சட்ட திருத்தம். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்கப்படும். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய தந்தி டி.வி. பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. தமிழகத்தின் கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை அனைத்து பிரிவினரையும் கருத்துக் கணிப்பு கேள்விகளோடு சந்த்தித்தார்கள், தந்தி டி.வி. செய்தியாளர்கள்.

1,580 பேரை சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்த கேள்விகளை கேட்டபோது, மக்கள் கொடுத்த பதில் கருத்துக்கணிப்புகளாக இங்க. 1580 பேரில் 70.4 சதவீதம் ஆண்களிடம், 29.6 சதவீதம் பெண்களிடம் சிஏஏ பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 18 முதல் 24, 25 முதல் 40, 41 முதல் 50, 50 வயதுக்கு மேல் என அனைத்து வயதினரிடமும்ம் கருத்து கேட்கப்பட்டது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு நியாயமானது என 41.5 சதவீத மக்களும், வாக்கு அரசியல் என 58.5 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத்தால் தமிழக இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை என்ற தமிழக அரசின் வாக்குறுதி பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டதற்கு, சரி என 36.7 சதவீத மக்களும், அரசியல் ஆதாயத்துக்காக என 44.1 சதவீத மக்களும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். டெல்லி கலவரம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட சவாலா என்ற கேள்விக்கு ஆம் என 70.7 சதவீத மக்களும், இல்லை  என  29.3 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் அவசியமா? என்ற கேள்விக்கு ஆம் என 43.5 சதவீத மக்களும், இல்லை என 41.5 சதவீத மக்களும் பதிலளித்துள்ளனர். இதே போல், குடியுரிமை சட்டம் பற்றி தெரியுமா? என்ற கேள்விக்கு தெரியும் என 64.1 சதவீத மக்களும், தெரியாது என 21.3 சதவீத மக்களும் கட்சிகளின் பிரசாரத்தால் தெரியும் என 14.6  சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்