விருதுநகர், புதுக்கோட்டை, விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு - ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
விருதுநகர், புதுக்கோட்டை, விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு - ஏராளமானோர் கண்டு ரசித்தனர்
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இந்த போட்டியில், 600க்கும் மேற்பட்ட காளைகள், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் சைக்கிள், குக்கர், மிக்சி உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. 

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி

எம்.ஜி.ஆர் மற்றம் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி, மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் சீறிய காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இறுதியாக, போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள், மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை, ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.  

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்,  மல்லுக்கட்டும் காளையர்கள் 

புதுக்கோட்டை மாவட்டம்  மழையூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 

இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும்  காளைகளை அடக்க 300க்கும் மேற்பட்ட  மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர். போட்டியை ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். 




Next Story

மேலும் செய்திகள்