"தமிழக மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம்" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் ஓமனில் இருந்து தமிழகம் வந்த 27 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் ஓமனில் இருந்து தமிழகம் வந்த 27 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இருப்பதால் கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகளை கண்காணிக்குமாறு விமான நிலையங்கள் மட்டுமின்றி ரயில்வே துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பீலா ராஜேஷ் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்