ரூ. 367 கோடியில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாகையில் 367 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்
ரூ. 367 கோடியில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை  - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர்  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து  விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாக கூறினார். மேலும் வேதாரண்யத்தில், 250 ஏக்கர் பரப்பளவில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும் என கூறிய முதலமைச்சர்,  காவிரி - கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுதில் அரசு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்