'YES BANK' நிர்வாகத்தை கையில் எடுத்தது ஆர்.பி.ஐ - பங்கு சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

வாராக்கடனில் தத்தளிக்கும் yes bank-ஐ தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரிசர்வ் வங்கி அந்த வங்கியை நிர்வாகிக்க வங்கியாளர் ஒருவரையும் நியமித்துள்ளது .
YES BANK நிர்வாகத்தை கையில் எடுத்தது ஆர்.பி.ஐ - பங்கு சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
x
வாராக்கடனால் தத்தளிப்பு, கால்கடுக்க காத்து கிடக்கும் வாடிக்கையாளர்கள் , பங்கு சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி இப்படி அடுத்தடுத்த  சிக்கலில் தவித்து வருகிறது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான  எஸ் பேங்க.

வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும்  ரிசர்வ் வங்கி தன் வசப்படுத்தி உள்ளது . இதனால் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் தமது கணக்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்  வரை மட்டுமே எடுக்க அனுமதி  வழங்கப் பட்டுள்ளது . வங்கி நிதியினை காக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது  இதனால் பணத்தை எடுப்பதற்காக ஏடிஎம் மையத்தில்  நீண்ட வரிசையில் எஸ். வங்கி முன் வாடிக்கையாளர்கள் காத்து கிடக்கின்றனர். 50 ஆயிரம் ரூபாய்க்கு  மேல்  எடுக்க முடியாத தால் அவர்கள் , தங்கள் பணத்தையே எடுக்க முடியாமல்  தவித்து வருகின்றனர்


எஸ் பேங்கினை நிர்வகிக்க முன்னாள் பாரத ஸ்டேட் வங்கி தலைமை நிதி அலுவலர் பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி  அறிவித்தன 

ரிசர்வ் வங்கியின்அறிவிப்பினை அடுத்து எஸ் பேங்கின் பங்குகள் பங்கு சந்தையில் வரலாறு காணாத அளவாக 86 சதவீத சரிவினை சந்தித்தன. இதனால் வாடிக்கையாளர்களை தொடர்ந்து முதலீட்டாளர்களும் அதிரச்சி அடைந்தனர் 


இது ஒரு புறம் இருக்க, பாஜகவின் 6 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏற்கனவே வாராக்கடன் காரணமாக பிஎம்சி வங்கியை ரிசர்வ் வங்கி தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. தற்போது எஸ் பேங்கையும் கொண்டுவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்