கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி கட்டடம் கட்ட அனுமதி பெற வேண்டும் - அரசாணை வெளியீடு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கட்டடம் கட்ட, தேசிய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி கட்டடம் கட்ட அனுமதி பெற வேண்டும் - அரசாணை வெளியீடு
x
கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கட்டடம் கட்ட, தேசிய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக நடக்கவிருந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. கருத்துக் கேட்பு கூட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திடீரென காலை 10.30 மணி அளவில் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே, கூட்டத்திற்கு முறையாக அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்