கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பதவி : "தேர்தல் நடத்தலாம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பதவி : தேர்தல் நடத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி
x
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு  நடந்த ஊரக - உள்ளாட்சி தேர்தலில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் 15வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு  ஜனவரி 11 ம் தேதி மறைமுக தேர்தல் நடத்தபட்ட போது, தேர்தல் அதிகாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதையும் மனுதாரர் சுட்டிக்காட்டி இருந்தார். ஜனவரி 30 ஆம் தேதி தலைவர்  பதவிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு முடிவு வெளியிடப்பட்ட நிலையில்,  துணைத் தலைவர் பதவிக்கு மார்ச் 4 ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதாவும், துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக  7 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று விதி உள்ளதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இந்த விதி முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிப்பதுடன், முறைப்படி தேர்தல் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்  கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சரவணன்,  தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதுடன், முடிவு தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை   2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.



Next Story

மேலும் செய்திகள்