அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி என புகார் - செந்தில் பாலாஜி மட்டும் ஆஜரானார்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட நான்கு பேர் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி என புகார் - செந்தில் பாலாஜி மட்டும் ஆஜரானார்
x
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட நான்கு பேர் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில், போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், நீதிபதி ரமேஷ் முன்பு, செந்தில்பாலாஜி ஆஜரானார். எனினும், ஒருவர் ஆஜராகாததால், அனைவரும் 23ஆம் தேதிக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டு, வழக்கு அன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்