குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - இஸ்லாமியர் 200 பேர் பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இஸ்லாமியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - இஸ்லாமியர் 200 பேர் பங்கேற்பு
x
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இஸ்லாமியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முருகன் கோயில் முன் உசிலம்பட்டி மற்றும்  தொட்டப்ப நாயக்கனூர், எழுமலை, பேரையூர், தும்மநாயக்கன்பட்டி பகுதி ஜமாத்-களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறவும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில், எவ்வித போராட்டத்திலும் இஸ்லாமியர்கள் ஈடுபட்டதில்லை என கூறப்படுகிறது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


Next Story

மேலும் செய்திகள்