இன்னொரு பொள்ளாச்சியான சங்கரன்கோவில் - 100க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் விசாரணை

சொகுசு காருக்கும் உல்லாச வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பள்ளி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரை ஏமாற்றிவிட்டு ஊர் சுற்றித்திரிந்த மாணவிகள் கட்சி பிரமுகரால் சீரழிக்கப்பட்டுள்ளனர்.
இன்னொரு பொள்ளாச்சியான சங்கரன்கோவில் - 100க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் விசாரணை
x
கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி ஒருவர் , இரவு நேரத்தில் மது போதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்துள்ளார்.... அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை அடித்து உதைத்து கேட்டதில், போதையில் அத்தனை உண்மைகளையும் உளறியுள்ளார் அந்த மாணவி...

அதிர்ந்து போன உறவினர்கள், மாணவியை பொறியாக வைத்தே சேதுராஜ் என்ற அரசியல் புள்ளியை மடக்கி பிடித்துள்ளனர்.  சிக்கிய சேதுராஜ் ஊர்மக்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார். 

சங்கரன்கோவிலை அடுத்த அடைக்கலாபுரத்தை சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளர் தான் இந்த சேதுராஜ், சொகுசு கார்களில் பந்தாவாக சுற்றித்திரியும் இந்த சேதுராஜ், பேருந்துக்காக காத்திருக்கும் மாணவிகளிடம் பேச்சு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்... சேதுராஜின் பந்தாவான பேச்சில் மயங்கும் பெண்கள் அன்று அவருக்கு விருந்து... அவர்களுடன் சினிமா, வெளியூர் என சுற்றித்திரியும் சேதுராஜ் மாணவிகளுக்கு மது, போதை பழக்கத்திற்கும் அடிமையாக்கியுள்ளார். போதைக்கு அடிமையான மாணவிகள், அந்த பழக்கத்தில் இருந்து மீள முடியாமல், மீண்டும் சேதுராஜூடன் சுற்றித்திரிய, அவரது நண்பர்களுக்கும் அந்த மாணவிகள் விருந்தாக்கப்பட்டுள்ளனர்.   

இவ்வாறு, ஒன்றல்ல ரெண்டல்ல....  கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இவரது வலையில் வீழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் உடனடியாக சேதுராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அதிலும் ஊர்மக்கள் ஒரு சந்தேகத்தை முன்வைக்கின்றனர். அதாவது, இந்த சம்பவத்தில், சேதுராஜ் மற்றும் குற்றவாளி அல்ல... சேதுராஜ், வலையை விரித்து மீன்களை பிடித்து விற்றவர்தான்... மீன்களை பல அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டுள்ளனர் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

பொள்ளாச்சி போல நாளுக்கு நாள் பல பயங்கரங்கள் அரங்கேறி வருவதாலும், ஏழ்மையாலும், கிராம‌ புறத்தில் பல பெண் பிள்ளைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக உள்ளது... ஒரு சில பெற்றோர் மற்றவர்கள் பேச்சை கேட்காமல், தங்கள் பெண் பிள்ளைகளை நம்பி சற்று அதிகமாக படிக்க வைத்தால், அந்த மாணவிகளோ தங்கள் பெற்றோரை எப்படி ஏமாற்றலாம் என்பதையே முதலில் கற்று கொள்கின்றனர்... என்னதான் சிறார் ஆபாச படங்களை பார்த்தாலே அரெஸ்ட் என போலீசார் பல வழிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், பெண் பிள்ளைகளுக்கு போதிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினரின் கருத்தாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்