"நிலத்தடி நீர் சான்று - தொடர்ந்து பெற முடியாத நிலை" - கேன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் வேதனை

தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
x
தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சங்க நிர்வாகிகள், நிலத்தடி நீர் எடுக்க தடையில்லா சான்று பெறாமல் நடத்தப்படும் நிறுவனங்களை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தனர். நிலத்தடி நீருக்கான தடையில்லா சான்றை பொதுப்பணி துறையினர் மூலம் பெற கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முயற்சித்தும், இதுவரை பெற முடியாத நிலை நீடிப்பதாக குறிப்பிட்டனர். சலுகை வழங்க கோரி அரசை பல முறை அணுகி உள்ளதாகவும், அரசு பேச அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு வர தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்