குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது - அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
x
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு நன்றி கூறியதாக தெரிவித்தார். என்.ஆர்.சி - க்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை போல தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக அன்புமணி கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்