"கிளை வாய்க்காலை காணவில்லை" - திரைப்பட பாணியில் பொதுமக்கள் புகார்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே 13 அடி அகலம் கொண்ட கிளை வாய்க்காலை காணவில்லை என திரைப்பட பாணியில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
கிளை வாய்க்காலை காணவில்லை - திரைப்பட பாணியில் பொதுமக்கள் புகார்
x
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 13 அடி அகலம் கொண்ட கிளை வாய்க்காலை காணவில்லை என திரைப்பட பாணியில் பொதுமக்கள் புகார் அளித்தனர். பவானி அருகே விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் மேற்குக்கரை வாய்க்கால் வழியே செல்கிறது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பயன்படுத்திய பின், மீதமுள்ள தண்ணீர் வெளியேறுவதற்காக, வாய்க்கால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், வாய்க்கால் இருந்த வழித்தடத்தை ஆக்கிமிரத்து தார் சாலைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டது. இதனால் வாய்க்கால் பாதை அழிக்கப்பட்டு, குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த மக்கள், திரைப்பட பாணியில், ஆட்சியரிடம் வாய்க்காலை காணவில்லை என புகார் அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்