"பத்திர பதிவுக்கு முன்பே உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறை" - தமிழக அரசு உத்தரவு

பத்திர பதிவுக்கு முன்பே நிலத்தின் உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறையை நான்கு தாலுக்காக்களில் சோதனை முறையில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்திர பதிவுக்கு முன்பே உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய  முறை - தமிழக அரசு உத்தரவு
x
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நிலம் தொடர்பான சொத்துக்கள் பத்திரப் பதிவு செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக , பத்திரப்பதிவிற்கு முன்பே உட்பிரிவுகள் பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என பேரவையில் வருவாய்த் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நடைமுறையின் கீழ், அவரவரின் நிலங்கள், சொத்துக்களை விற்பனை செய்ய விரும்பும் நில உரிமையாளர்கள் வட்ட அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து, விற்பனை செய்ய விரும்பும் நிலங்கள், சொத்துக்களின்  புலப்படங்களின் சான்று அளிக்கப்பட்ட நகலைப் பெற வேண்டும். பத்திரப் பதிவுக்கு முன்பாக உட்பிரிவுகள் பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறையை பரீட்சார்த்த முறையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், சோழகிரி ஆகிய தாலுகாக்களிலும், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் தாலுகாக்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது .


Next Story

மேலும் செய்திகள்