அரசியலுக்காக ஆறுமுகசாமி ஆணையம் குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார் - அமைச்சர் தங்கமணி

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தை உடனே அறிக்கை தாக்கல் செய்யக் கூறி, நிர்ப்பந்தப்படுத்த முடியாது என, பரமத்தியில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
x
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தை உடனே அறிக்கை தாக்கல் செய்யக் கூறி, நிர்ப்பந்தப்படுத்த முடியாது என, பரமத்தியில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் மற்றும் நீதிபதிகளுக்கான  குடியிருப்பு கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.தாரணி, மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு, பத்து  கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான  குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிக்கு  அடிக்கல் நாட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அரசியலுக்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஆறுமுகசாமி ஆணையம் குறித்து பேசி வருவதாகவும், தீர்ப்பு வழங்குவது குறித்து ஆணையத்தை அரசு நிர்ப்பந்திக்க இயலாது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்