நடப்பாண்டில் கார் விற்பனை சற்று உயர வாய்ப்பு - பொருளாதார ஆய்வு நிறுவன ஆய்வில் தகவல்

இந்தியாவில் கார் விற்பனை கடந்த ஓராண்டாக சரிந்துள்ள நிலையில் நடப்பாண்டில் சற்று வளர்ச்சி அடையும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் கார் விற்பனை சற்று உயர வாய்ப்பு - பொருளாதார ஆய்வு நிறுவன ஆய்வில் தகவல்
x
பொருளாதார தேக்க நிலை காரணமாக, கடந்த ஆண்டில் கார் விற்பனை 12 சதவீதம் வரை சரிந்ததால், பல முன்னணி நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்தன. சுமார் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமாக ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில், மூடிஸ் வெளியிட்டுள்ள ஆய்வில், பொருளாதார மந்தம் காரணமாக, நுகர்வு பாதிக்கப் பட்டுள்ளதால், பெரிய அளவிலான ஏற்றத்தை இந்த ஆண்டு எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளது. எனினும், 2021 ஆம் ஆண்டில் விற்பனை 2 சதவீதம் வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்