கீழடி 6ம் கட்ட அகழாய்வு பணிகள் - கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடி 6ம் கட்ட அகழாய்வு பணிகள் - கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
x
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வு பணியில், முதுமக்கள் தாழி போன்ற வட்ட வடிவிலான பகுதி தென்பட்டுள்ளது. இதை முழுமையாக வெளியே எடுக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அகழாய்வு பணிகள் தொடங்கிய ஒரு வாரத்தில் இந்த பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்