ஏழைகளை கண்டறிய 10 புதிய அளவுகோல்- தேசிய அளவில் ஆய்வு நடத்த புள்ளிவிவரத்துறை திட்டம்

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களை கண்டறிய மத்திய அரசு புதிய முறையை கடைபிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏழைகளை கண்டறிய 10 புதிய அளவுகோல்- தேசிய அளவில் ஆய்வு நடத்த புள்ளிவிவரத்துறை திட்டம்
x
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களை கண்டறிய மத்திய அரசு புதிய முறையை கடைபிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய அளவில், மத்திய புள்ளி விவரத்துறை நடத்த உள்ள இந்த ஆய்வில், வறுகைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களை வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடாமல் 10 புதிய அளவுகோல் அடிப்படையில் கணக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.  புதிய முறையில், வீட்டில் உள்ள வசதிகள், உணவுப் பழக்கம், குடிநீர், எரிபொருள், சொத்துகள் ஆகியவை அடிப்படையில் கணக்கிடப்படும். 2015-16 ஆண்டு கணக்கீடுபடி நாட்டில் 28  சதவீத மக்கள் வறுகை கோட்டுக்கு கீழே உள்ளதாக மத்திய புள்ளிவிவரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்