சாலையில் சென்ற வேனில் திடீர் தீ விபத்து - லேசான காயத்துடன் உயிர்தப்பிய ஓட்டுனர்

சேலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஓன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
சேலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஓன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சன்னியாசிகுண்டு என்ற பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், வேன் ஓட்டுனர் மகேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்