சென்னையில் மார்ச்சில் தமிழக காங்கிரஸ் அரசியல் மாநாடு : ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாட்டில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மார்ச்சில் தமிழக காங்கிரஸ் அரசியல் மாநாடு : ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தகவல்
x
அடுத்த மாதம் சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்காக  சென்னை வரும் ராகுல்காந்தி, ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி 150 அடி உயர  கொடி கம்பத்தில் அக்கட்சியின் கொடியே ராகுல்காந்தி ஏற்றிவைக்க உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கம்பத்தில் 60 அடி அகலம்,  40 அடி நீளத்தில் காங்கிரஸ் கொடி பறக்கவிடப்பட உள்ளது.  இதனிடையே, இந்த மாநாட்டிற்கு நிதி திரட்டுவது தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மூவாயிரம் பேருக்கு கே.எஸ்.அழகிரி கடிதம் எழுதியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்