முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம் பிடித்த கல்லூரி மாணவி

தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை முட்டையில் வரைந்து, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம் பிடித்துள்ளார் கல்லூரி மாணவி ஒருவர்.
x
தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை முட்டையில் வரைந்து,  'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம் பிடித்துள்ளார் கல்லூரி மாணவி ஒருவர்.  கோவை, தொண்டாமுத்தூரை அடுத்த உளியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் - ஆனந்தஜோதி தம்பதியின் 19 வயது மகள் மோனிஷா. கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் அவர்,  தன்னுடைய சுய ஆர்வத்தில் ஓவியம் வரையத் தொடங்கி இன்று அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 10 வயதிலிருந்தே ஓவியத்தில் அக்கறை காட்டி வந்ததால், பெற்றோரும், ஆசிரியர்களும் மோனிஷாவை ஊக்கப்படுத்தி வந்துள்ளனர். ஓவியம் வரைவதில் தொடர்ந்து முயற்சிகளை செய்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன் 50 முட்டைகளில், ஒன்றரை மணி நேரத்தில் தலைவர்களின் படங்களை வரைந்துள்ளார். அவரது இந்த முயற்சி "இந்தியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ்"ல் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓவியக் கலையில் சாதிக்க வேண்டும் என தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யும் மாணவிக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்