"புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா"

தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
x
இது தொடர்பான முதலமைச்சரின் சுற்றுப்பயணம் குறித்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் ஒன்றாம் தேதி ராமநாதபுரம், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கும்,ஐந்தாம் தேதி நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக பயண பட்டியலில் கூறப்பட்டுள்ளது.மார்ச் ஏழாம் தேதி நாகை மருத்துவக் கல்லூரி, எட்டாம் தேதி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி, மார்ச்14ஆம் தேதி, திருப்பூர் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி அடிக்கல் நாட்டுவார் எனவும் இதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்