தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் டிஎன்பிஎஸ்சி அச்சம் - சென்னை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து உத்தரவு

தொடர்ந்து வெளியாகி வரும் தேர்வு முறைகேடுகள் காரணமாக அச்சமடைந்துள்ள டிஎன்பிஎஸ்சி, கால்நடை மருத்துவத் துறை பணிகளுக்கான தேர்வை சென்னை தவிர்த்து மற்ற ஆறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
x
கால்நடை மருத்துவத் துறையில் 1114 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு, சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி உட்பட 7 மாவட்டங்களில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில், திடீரென டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்ட அறிவிப்பில், சென்னை தவிர்த்து மற்ற ஆறு மாவட்டங்களுக்கான தேர்வு மையங்களை ரத்து செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. தேர்வு முழுவதும் சென்னையில் மட்டுமே நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த திடீர் முடிவு குறித்து, தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்