பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன என்று, ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்க, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேரை விடுவிப்பது தொடர்பாக  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த விவகாரத்தில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அரசு காத்திருப்பதாக கூறியுள்ளது. அப்போது,  விடுதலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது குறித்து, ஆளுநரிடம் கேட்க வேண்டியது உச்சநீதிமன்றம் அல்ல? அரசு தான், என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தீர்மான மீதான எடுக்கப்பட்ட முடிவு என்ன, அதன் நிலை என்ன என்பது குறித்து,  ஆளுநரிடம் கேட்டு தெரிவியுங்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீர்மான கோப்பின் நிலவரத்தை கேட்டறிவது மாநில அரசின் கடமை  என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து  விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்