பாதாள சாக்கடையில் மனிதனை இறக்க தடை விதிக்க வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிக்கு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தலா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
பாதாள சாக்கடையில் மனிதனை இறக்க தடை விதிக்க வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தப்படுத்தும் பணிக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு,  தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் தலைமையில் விசாரணைக்கு வந்தது. 2019 வரை சாக்கடை தூய்மைப் பணியில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியதாக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது, கும்பகோணம் மற்றும் விழுப்புரத்தில், மனிதனே பாதாள சாக்கடை தூய்மைப் பணி மேற்கொள்வதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து இரு நகராட்சி ஆணையர்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்,  சாக்கடைகளை சுத்தம் செய்தும் பணிக்கு இயந்திரங்கள் வாங்க, ஒவ்வொரு மாவட்டத்துக்கும்10 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர். வழக்கு விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்