"எஸ்.சி,எஸ்.டி திருத்த சட்டம் செல்லும்" : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
எஸ்.சி,எஸ்.டி திருத்த சட்டம் செல்லும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
x
கடந்த 2018ஆம் ஆண்டு, எஸ்.சி. - எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ப்ருத்வி ராஜ் சவுகான் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் 2018 அரசியலமைப்பு படி செல்லும் என்று கூறியுள்ளது. திருத்த சட்டத்தின்படி, கைது செய்ய முன் விசாரணை தேவையில்லை என்றும் பணியாளர்களை கைது செய்ய உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்