200 அரங்குகளை கொண்ட விவசாயக் கண்காட்சியில் முதல்வர் இயக்குவது போன்ற டிராக்டர் சிற்பம் வடிவமைப்பு

சேலம் மாவட்டம் தலைவாசலில் 200 அரங்குகளை கொண்ட விவசாய கண்காட்சி விவசாயிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது.
x
சர்வதேச தரத்திலான கால்நடை பூங்கா அமையும் சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோடு பகுதியில், 200 அரங்குகளுடன் விவசாய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலிக்குளம், ஆலம்பாடி, பர்கூர், காங்கேயம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த அரியவகை காளைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 

செவ்வாடு, மேச்சேரி, சென்னை சிவப்பு, சேலம் கருப்பு உள்ளிட்ட ஆட்டினங்கள், பல்வேறு கோழி இனங்கள், வான்கொழி, காடை, மீன், முயல் உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. பொங்கல் பண்டிகையின்போது தந்தி டி.வி-க்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த சிறப்பு நேர்காணலின்போது, டிராக்டர் இயக்கிய காட்சி, பழங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பூக்களால் உருவாக்கப்பட்ட மயில், காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கோபுரம், தானியங்களால் தயாரான தேர் உள்ளிட்டவை காண்போர் மனதை ஈர்த்துள்ளன. 

விவசாய தோட்டத்தில் உள்ள செடிகளை தீவனமாக அரைக்கும் இயந்திரம்,  பறக்கும் மருந்து தெளிப்பான், சொட்டுநீர் பாசனத்தின் மூலம் குறைந்த தண்ணீரில் விவசாயம் செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், விவசாயத்திற்கு பயன்படும் பல்வேறு டிராக்டர் வகைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. விவசாயத்தை மேம்பாடுத்த நடத்தப்படும் இக்கண்காட்சியை காண வரும் மக்கள், புதிய அனுபவத்தை பெறுவார்கள்.

Next Story

மேலும் செய்திகள்