"100 ஜெயலலிதா, 200 கருணாநிதியாக அமித்ஷா உள்ளார்" - நடிகர் ராதாரவி

நூறு ஜெயலலிதா மற்றும் இருநூறு கருணாநிதியாக மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளார் என நடிகர் ராதாரவி புகழ்ந்துள்ளார்.
x
நூறு ஜெயலலிதா மற்றும் இருநூறு கருணாநிதியாக மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளார் என நடிகர் ராதாரவி புகழ்ந்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற பா.ஜ.க. முப்பெரும் விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, நாட்டை காப்பாற்றும் ஒரே கட்சி பாஜக என்றார். தமிழகத்தில் பாரதியாருக்கு மிக உயரமான சிலை வைக்க வேண்டும் என்ற அவர், இந்தியாவில், 80 சதவிகிதம் உள்ள இந்துக்கள் அடிபணிய கூடாது என்றும் தெரிவித்தார். அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் சிக்கியதாகவும், அப்போது தாம் ஒரு இந்து என கூறி தப்பி வந்ததாகவும் நடிகர் ராதா ரவி குறிப்பிட்டார். ரஜினிகாந்துக்கு புரிந்துவிட்டது, அவர் மிகச் சரியாக பேசிவருகிறார் என்றும்,  ரஜினியை ஒன்றும் செய்ய முடியாது என்றும் ராதாரவி கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்