தலைவாசலில் சர்வதேச தரத்தில் கால்நடை பூங்கா - அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சர்வதேச அளவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா சேலத்தில் அமைய உள்ளது. இதற்கான பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
தலைவாசலில் சர்வதேச தரத்தில் கால்நடை பூங்கா - அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
x
ஆயிரத்து 22 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த கால்நடைப் பூங்கா, சர்வதேச தரத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக இருக்கும்.  சேலம் மாவட்டம் தலைவாசலில்  கால்நடைப் பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  இதில், கால்நடை உயர்தொழில்நுட்பங்கள், நாட்டின கால்நடை மற்றும் விலங்கினங்கள் ஆராய்ச்சி, கால்நடை மருத்துவக் கல்லூரியும் இந்த ஒருங்கிணைந்த பூங்காவில் அமைய உள்ளது. அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அதிமுக எம்.பிக்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் திருச்சி, சேலம், திருவண்ணாமலையில் புதிதாக 3 கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைய உள்ளதாக பெருமிதம்  தெரிவித்தார். மேலும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாகவும் இதற்காக தனிச்சட்டம் கொண்டு வரப்படும் எனவும்  அறிவித்தார். 
முன்னதாக அங்கு, விவசாய கண்காட்சியினை முதலமைச்சர்  பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.  இந்த கண்காட்சியில், விவசாய தொழில்நுட்பங்கள், கால்நடைகள், விலங்கினங்கள் பராமரிப்பு, உற்பத்தி பெருக்கம் தொடர்பாக காட்சி படுத்தப்பட்டுள்ளன. 

தொடர்ந்து கால்நடைப் பூங்காவின் மாதிரி வடிவம் மற்றும் இலட்சினையை முதலமைச்சர் பழனிச்சாமி அறிமுகம் செய்தார். இந்தக் கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,  கால்நடை  பூங்காவின் அதிநவீன வசதிகள் மூலம் கால்நடைகளுக்கு உயர்தரமான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்