வாழப்பாடி அருகே 13 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம்: விழாவில் ராகுல் டிராவிட், ஸ்ரீனிவாசன் பங்கேற்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதனாத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
x
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர்  துாரத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் ,சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் சார்பில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.  கிராமப்புறங்களில் உள்ள திறமைவாய்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் , முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

சேலத்தில் கிரிக்கெட் மைதானம் : "எதிர்கால தலைமுறைக்கு படிக்கல்லாக அமையும்" - ராகுல் டிராவிட்


கிராமப்புற கிரிக்கெட் வீரர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

"தோனி கண்டிப்பாக இந்த மைதானத்தில்  விளையாடுவார் " - முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன்


வாழப்பாடியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல் போட்டி 
நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.


"வாழப்பாடியில் ஐ.பி.எல் போட்டி : மகிழ்ச்சி  அளிக்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக, தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்