"8 மணிநேர மின்வெட்டை பழகியவர்கள் 5 நிமிட மின்தடையை மக்கள் பொறுப்பதில்லை" - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது.
8 மணிநேர மின்வெட்டை பழகியவர்கள் 5 நிமிட மின்தடையை மக்கள் பொறுப்பதில்லை - அமைச்சர் தங்கமணி
x
தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் தங்கமணி, கோடை காலத்தில் அனைவருக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க  நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்தாண்டு கோடையில், மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். மின்தடை குறித்து மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, சரியான பதில் சொல்ல வேண்டும் என்றும், ஊழியர்களை அவர் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்