ராமேஸ்வரத்தில் சுற்றித் திரிந்த சீன நபரால் பரபரப்பு - மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை

ராமேஸ்வரத்தில் சுற்றித்திருந்த சீன நபரை பார்த்து மக்கள் அச்சம் அடைந்ததால் கொரோனா தொடர்பான பரிசோதனைக்காக மதுரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ராமேஸ்வரத்தில் சுற்றித் திரிந்த சீன நபரால் பரபரப்பு - மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை
x
 சீனாவை சேர்ந்த  வு சென் சூ என்பவர் கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்க வந்துள்ளார். அங்கு சுற்றித்திரிந்த நிலையில், நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அதில் அவர் சீனாவில் இருந்து வந்தது தெரியவந்ததை அடுத்து, கொரோனா அறிகுறி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த மதுரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த வு சென் சூ வுக்கு சுகாதார குழுவினர் தீவிர பரிசோதனை செய்து, பின்னர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரானா பாதிப்பு அறிகுறி இல்லையென்று தெரியவந்தாலும் கூட, இந்திய அரசு அறிவுறுத்தலின்படி அவர் சீனாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.  


Next Story

மேலும் செய்திகள்