குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு செய்த பெண் பணியிடை நீக்கம்

குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலேயே வேலை செய்து வந்த உதவியாளர் கல்பனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு செய்த பெண் பணியிடை நீக்கம்
x
குரூப் 2 ஏ முறைகேட்டில் ஈடுபட்ட 42 பேரில், கல்பனா என்பவர் தேர்வாணைய அலுவலகத்திலேயே வேலை பார்த்து வந்துள்ளார். விண்ணப்பங்களை பராமரிக்கும் பிரிவில் உதவியாளராக வேலை பார்த்து வந்த கல்பனா, சென்னை, முகப்பேரில் முறைகேட்டில் சிக்கிய முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் வீட்டுக்கு அருகே வசித்து வந்துள்ளார். இவர் தனது கணவர் மூலம், பணம் கொடுத்து வேலைக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தேர்வாணைய அதிகாரிகளால், கல்பனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்