அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரம் : "பெரிதுபடுத்தி பேசுவது வேதனை அளிக்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது.
x
சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர்,  டி.என்.பி.எஸ்.சி. தன்னாட்சி பெற்ற அமைப்பு என்றும், அதில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரத்தை பெரிதுபடுத்தி பேசுவது வேதனை அளிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்