"மாஸ்டர்" படப்பிடிப்பு - பலத்த பாதுகாப்பு

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள, என்எல்சி 2வது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
மாஸ்டர் படப்பிடிப்பு - பலத்த பாதுகாப்பு
x
நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள, என்எல்சி 2வது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை விசாரணை முடிந்து, நேற்று மீண்டும் படப்பிடிப்புக்கு விஜய் வந்த நிலையில், பாஜகவினர் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு விஜய் ரசிகர்கள் அங்கு கூடியதால் பதட்டம் ஏற்பட்டு, லேசான தடியடி நடைபெற்றது. இதையடுத்து, இன்று வழக்கம் போல் நடிகர் விஜய் படப்பிடிப்புக்கு வந்தார்.  மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினருடன், தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்