சிபிசிஐடி ஐஜிக்கு வந்துள்ள பரபரப்பு கடிதம் - "7 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்"

2004 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட 7 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிசிஐடி ஐஜிக்கு வந்துள்ள புகார் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிபிசிஐடி ஐஜிக்கு வந்துள்ள பரபரப்பு கடிதம் - 7 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்
x
சிபிசிஐடி ஐஜிக்கு வந்துள்ள கடிதத்தில் தற்போது பணியாற்றி கொண்டிருக்கும் மாவட்ட எஸ்பி மற்றும் பணியிலிருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஆகியோர் 
குரூப்-1 தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் 2003  மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குரூப்-1 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தீயணைப்புத்துறைகான எழுத்து தேர்வில் தோல்வி அடைந்தவர் மீண்டும் உடற்பயிற்சி தேர்வுக்கு அழைக்கப்பட்டதாகவும் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் தோல்வியடைந்த 5 நபர்கள் வெற்றி பெற்று தற்போது பணியாற்றி கொண்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2004 இல் ஆரம்பித்து 2012 வரை டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட ஏழு தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்