ஜெயக்குமாரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்- 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் சரணடைந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
x
டி.என்.பி.எஸ்.சி. நடத்திய  குரூப்- 4  மற்றும் குரூப் 2ஏ தேர்வு  முறைகேடு வழக்கில் சரணடைந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சிபிசிஐடி போலீசாரின் மனுவை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. விசாரணையின் போது நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு கதறி அழுத இடைத்தரகர் ஜெயக்குமார், போலீஸ் காவலில் தன்னைஅனுப்ப வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்