சத்திய ஞானசபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் - நாளை நடக்கிறது ஜோதி தரிசனம்

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 149வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சத்திய ஞானசபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் - நாளை நடக்கிறது ஜோதி தரிசனம்
x
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 149வது தைப்பூச திருவிழா  கொடியேற்றத்துடன்  தொடங்கியது. நாளை காலை 6 மணிக்கு  ஏழு திரைகள் நீக்கப்பட்டு முதல் ஜோதி  தரிசனம் நடைப்பெற உள்ளது.  தொடர்ந்து காலை10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.  வள்ளலார் தைப்பூச  ஜோதி தரிசனத்தை முன்னிட்டு  கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளத்துடன், மது மற்றும் மாமிச  கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்