தமிழக அணைகள் குறித்து ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு - தமிழக அரசின் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள அணைகளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய எட்டு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அணைகள் குறித்து ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு - தமிழக அரசின் அரசாணை வெளியீடு
x
மாநிலம் முழுவதும் உள்ள 120 அணைகளின் தரம், மதகுகள், கரைகளை ஆய்வு செய்து 6 பேர் கொண்ட குழு அறிக்கை சமர்ப்பித்து வருகிறது. இவர்களுக்கு உதவியாக எட்டு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி உறுப்பினர் நரேஷ்குமார் மாத்தூர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குழுவில் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் விவேல் திரிபாதி, பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்பட எட்டு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த குழுவினர் அணைகளில் நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை அரசுக்கு வழங்க உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்