தமிழகத்தில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை - முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
தமிழகத்தில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை - முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
x
லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைப்பெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  சுகாதாரத்துறை  செயலாளர் பீலா ராஜேஷ், கிங்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்  அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிங்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது,  லண்டனில் அமைந்துள்ள கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவ முதலமைச்சர் பழனிசாமி ஒப்பந்தம் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்